268 பிரிட்டிஷார்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த கேரள முதல்வர்

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (08:31 IST)
268 பிரிட்டிஷார்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த கேரள முதல்வர்
பல்வேறு பணிகளுக்காக கேரள மாநிலத்திற்கு வந்திருந்த 268 பிரிட்டிஷ்காரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு இரண்டு விமானங்கள் மூலம் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் அனுப்பி வைத்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து உலகம் முழுவதும் போக்குவரத்துக்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்
 
இந்த நிலையில் கேரளாவில் 268 பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்ததை அடுத்து அவர்கள் அனைவரையும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரிட்டன் நாட்டின் அரசு கேட்டுக் கொண்டது. இந்த கோரிக்கையை மத்திய அரசும் கேரள அரசும் ஏற்று கொண்டதை அடுத்து திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களை பிரிட்டன் அரசு அனுப்பி வைத்தது
 
இந்த இரண்டு சிறப்பு விமானங்களில் 268 பிரிட்டன் நாட்டினர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பிரிட்டனுக்கு நேற்று பத்திரமாக அனுப்பி வைத்தார். இதற்கு இந்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு நன்றி கூறிக் கொள்வதாக பிரிட்டன் நாட்டின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்