ரயில் விபத்தில் 13 பேர் பலி.. டீ விற்பவர் பரப்பிய தீ வதந்தி தான் காரணமா?

Mahendran

வியாழன், 23 ஜனவரி 2025 (17:35 IST)
சமீபத்தில் நிகழ்ந்த ரயில் விபத்திற்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக கிளப்பப்பட்ட புரளிதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த வதந்தியை டீ விற்பவர் தான் பரப்பியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பச்சோரா என்ற இடத்தை அடைந்த போது திடீரென ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவியது.

இதனை அடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்து அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர். அவசர அவசரமாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே இறங்கிய போது அடுத்த தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் பேட்டியளித்த போது, ‘டீ விற்பவர்  ஒருவர் தான் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தியை பரப்பினார் என்றும் அவர்தான் அவசரச் சங்கிலி பிடித்து இழுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் இன்னும் அதிக உயிர் பலியாகி இருக்கும் என்றும் ஆனால் பல பயணிகள் மாற்று திசையில் குதித்ததால் அந்த பக்கம் ரயில் வழித்தடம் இல்லாததால் காப்பாற்றப்பட்டனர் என்றும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த வழித்தடத்தில் அவர்களும் குதித்திருந்தால் இன்னும் இறப்பு எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் என்றும் தெரிவித்தார் .

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்