பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த நிலையில், அவர் ஐந்து நாட்களில் டிஸ்சார்ஜ் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதேஷ் ரானே இந்த சம்பவம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்த வீடியோவை பார்க்கும் போது சயீப் அலிகான் தாக்கப்பட்டவர் போலவே தெரியவில்லை என்றும், அவர் நடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்புகிறார். எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.