கால்பந்து விளையாடி கொண்டிருந்த 16 வயது மாணவி திடீரென மரணம்: அதிர்ச்சியில் பெற்றோர்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (14:18 IST)
அமெரிக்காவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 16 வயது பள்ளி மாணவி திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் பள்ளி அளவில் நடந்த கால்பந்து போட்டியின் போது 16 வயது சோபொமேரே என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் 
இதனையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் அவரை காப்பாற்ற கடுமையாக போராடிய நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்
 
கால்பந்து போட்டியின் போது திடீரென சரிந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த காட்சியை தொலைக்காட்சியில் லட்சக்கணக்கானோர்  அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கால்பந்து வீராங்கனை உயிரிழந்ததற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்