கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவியது என்பதும், இதனால் உலகம் முழுவதும் மிகப்பெரிய உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது என்பதும் தெரிந்தது.
அதன் பின்னர், கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது என்பதும், படிப்படியாக கொரோனா முழுமையாக நீங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளிலும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இருப்பினும், இது கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும், உலக சுகாதார மையம் இது குறித்து தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.