பாதசாரிகள் மீது தாறுமாறாக ஓடிய வேன்: ஐ.எஸ்.ஐ கொடூர தாக்குதலால் 13 பேர் பலி

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (05:49 IST)
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் இரண்டு ஐஎஸ்.ஐ தீவிரவாதிகள் அங்கிருந்த பிசியான சாலை ஒன்றில் பாதசாரிகள் மீது தாறுமாறாக வேனை ஓட்டியதால் ஏற்பட்ட கொடூர சம்பவத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இன்னும் ஒருசிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.



 
 
உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களால் அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ இயக்கம் நேற்று பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலாபயணிகள் அதிகம் கூடும் பகுதியில் திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. தாக்குதல் நடத்திய வேனை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றபோதிலும் அவர்கள் தப்பித்துவிட்டனர். இருப்பினும் இதுதொடர்பானவர்கள் என்று சந்தேகப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் தாக்குதலுக்கு காரணமான வேனை ஓட்டியவன் 20 வயது ஐஎஸ்.ஐ இயக்கத்தை சேர்ந்த ட்ரிஸ் ஒபகிர் என்ற இளைஞன் என்றும் இவன் மொரக்கோ நாட்டை சேர்ந்தவன் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்