ஐ.எஸ்.ஐ ராணுவ அமைச்சரின் மகன் படுகொலை: ஈராக்கில் பதட்டம்

புதன், 2 ஆகஸ்ட் 2017 (06:38 IST)
ஈரான் அரசுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக ஐ.எஸ்.ஐ இயக்கம் தீவிரவாத செயல்களிலும், போரிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் ராணுவ அமைச்சர் இந்த போரை முன்னின்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த தாக்குதல் ஒன்றில் ராணுவ அமைச்சர் உமர் அல் சிச்சானியின் மகன் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது



 
 
இதுகுறித்து ஐஎஸ்.ஐ இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு கூறியதாவது: “நினிவேயில் படையெடுக்கும் பிரிவை தலைமை தாங்கி நடத்தி வந்த சிச்சானியின் மகன், கொல்லப்பட்டு விட்டார். அவர் பலியாகிவிட்டது குறித்த தகவலை ஐ.எஸ். அமைப்பினர் ரகசியமாக வைத்துள்ளனர். அவர் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஹாவிஜாவில் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தன.
 
சிச்சானியின் மகன் கொல்லப்பட்டிருப்பது, ஐ.எஸ். அமைப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐக்கு எதிரான போரில் ஈரான் கடந்த சில நாட்களாக வெற்றி பெற்று வரும் இந்த செய்தி அந்நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக கருதப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்