நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஊழலுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார். இது அளும் கட்சியான அதிமுக-வை விமர்சிப்பது போல் உள்ளது.
அவரின் சில ட்விட்டுகள் விமர்சங்களுக்கு உள்ளானது. பலர் அவரை ஆதரித்தாலும், அதிமுகவினர் கமலை சாடி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது ஆட்டம் போடுகிறாரா? என்பது போன்ற விமர்சனங்களும் அவரை தாக்கியது.
மேலும், அதிமுக அரசை ஊழல் அரசாகக் கூறும் கமல், திமுக ஆட்சியில் இருந்த போது விமர்சித்தாரா என்ற கேள்வி அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பின்வரும் ட்விட்டை கமல் பதிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம்.எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்