பிலிப்பைன்ஸில் கப்பலில் தீ விபத்து....12 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (21:10 IST)
பிலிப்பைன்ஸ்  நாட்டில் ஜாம்போங்கா நகரில் ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்   ஒன்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பொங்பொங் மார்கஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள தெற்குப்பகுதியில் மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து  சுலுமாகாணத்திலுள்ள ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்தக் கப்பலில், சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, இந்தக் கப்பல் பலுக் தீவு என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கப்பலில் திடீரென்று தீப்பிடித்தது.

உடனே கப்பலில் தீ பரவியதை அடுத்து பயணிகள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி கடலில் குதித்தனர். இதுகுறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளை ஏற்றினர்.

அதன்பின்னர், கப்பலில் எரிந்த தீயு அணைக்கப்பட்டது.  இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், கப்பலில் சிக்கியிருந்த 230 பேர் பத்திரமாக கரையில் சேர்க்கப்பட்டனர்.  இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்