ஒரு கிளாஸ் தண்ணீருக்கு 7,30,000 ரூபாய் டிப்ஸ் – அதிர்ச்சியில் உரைந்த சேவகர்.

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (16:32 IST)
வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் ஹோட்டல் சேவகருக்கு 10000 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக தந்து சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸக் டாக்ஸ் எனும் உணவகத்தில் அலைனா கஸ்டர் என்ற பெண் சேவகராக வேலை செய்து வருகிறார்.  அப்போது ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கஸ்டரிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். கஸ்டரும் தண்ணிரை அவருக்கு கொடுத்துவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்து வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரின் மேஜைக்கு சென்ற போது அவர் 10000 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக வைத்து சென்றுள்ளார். அதனுடன் ‘ருசியான தண்ணீருக்கு நன்றி’ என்ற குறிப்பையும் வைத்து சென்றுள்ளார். அதைப் பார்த்தவுடன் கஸ்டர் அதிர்ச்சியில் சில நிமிடங்கள் அப்படியே உரைந்து நின்றிருக்கிறார்.

இதுகுறித்து கஸ்டர் ‘சத்தியமாக இது உண்மையா என்று என்னால் நம்பமுடியவில்லை. இவ்வளவு பணத்தைப் பார்த்தவுடன் என் உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்து விட்டது. எனக்கு நானே ’என்ன இது? என்ன இது?’ என்று திரும்ப திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

அந்த வாடிக்கையாளர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மிஸ்டர் பீஸ்ட் எனும் பிரபலமான யுட்யூப் சேனலின் நிறுவனரான அவர் தனது சேனலின் இரண்டு நபர்களை ஹோட்டலின் வெவ்வேறு இடத்தில் அமர்த்தி கஸ்டரின் உணர்வுகளை படம்பிடிக்க சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்