’ஜமால் கஸோக்கி’ உடல் வெட்டி துண்டாக்கப்பட்டதாக தகவல்...

செவ்வாய், 23 அக்டோபர் 2018 (18:10 IST)
சவூதி அரேபியாவில் பத்திரிகையாளர் அமால் கஸோக்கி கொல்லப்பட்ட வழக்கில் அமெர்க்க தன் கிடுக்க்குப்பிடி போட்டுள்ள நிலையில் சௌதி  அரசு தரப்பில் கஸோக்கி கொல்லப்பட்டடாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பின் தான் உண்மை நிலவரங்கள் அம்பலமாகி வருகின்றன.
 
 சௌதி சரேபிய அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த வாசிங்டன் பத்திரிக்கையளர் ஜமால் கஸோக்கி கொல்லப்பட்டதை முதலில் மறுத்த சௌதி அரசு தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.
 
இம்மாதம் இரண்டாம் தேதி துருக்கியில் உள்ள சவூதிஅரெபிய தூதரகத்திற்குள் நுழைந்த கஸோக்கி அடுத்த 7 நிமிடத்திற்குள் கொல்லப்பட்டு விட்டதாகவும் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவத்தினை அடுத்து கஸோக்கியைப்போன்று ஒருவர் உடையணிந்து வெளியே செல்வது போன்ற வீடீயோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
இவ்வளவு துரம் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில் இனியும் அடுத்த கட்ட விசாரணைக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் போது மேலும் உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதனல் சவூதி அரேபியாவில் பதற்றம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்