இந்தியா தேடிய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:17 IST)
இந்தியா தேடிய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது மட்டுமன்றி சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்காவும் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கைது செய்யப்பட்ட ஹபீஸ் சையது மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகள் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தன
 
இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹபீஸ் சையதுக்கு பயங்கரவாத வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் மட்டுமன்றி இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்