உலக அளவில் 1.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு: இந்தியாவில் உச்சகட்டம்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (07:24 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் தினமும் உலக அளவில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 1,09,73,896 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61,34,789 உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,231 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உலக பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கு உள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,837,189ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131,485ஆக உயர்வு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் சராசரியாக தினமும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 627,168 என்பதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,225 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
பிரேசிலில் 1,501,353 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 661,165 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 283,757 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 297,183 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரு நாட்டில் 292,004 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலி நாட்டில் 284,541 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்