என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்

வியாழன், 2 ஜூலை 2020 (18:21 IST)
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று   இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

 இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்.எல்.சி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்து, ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார்.

அதில், என்.எல்.சி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம்  பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  தலா ரூ. 30 லட்சம் நிதியுதவி செய்யப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு முதற்கட்டமாக ரூ,. 5 லட்சம்  வழங்கப்படும், மேலும் என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி-யில் நிரந்தர பணி வழங்கப்படும்!என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்