அந்த வகையில் பத்திரிகை துறை, காவல்துறை, மாநகராட்சி, கோவிட் பணி என போலியாக அனுமதி சீட்டு ஒட்டி வந்த 94 நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் கடந்த 13 நாட்களில் மட்டும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக கூறி 84,355 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.