ஆரோக்கியம் மிகுந்த கீரை சப்பாத்தி செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கீரை - ஒரு கட்டு
கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
கரம்மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
காரப்பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை:
 
கீரையை மண் போக அலசிப் பொடியாக நறுக்கவும். கோதுமை மாவுடன் தேவையான பொருட்கள் வரிசையில் இருக்கும் அனைத்தையும் சேர்த்து, கீரையையும் சேர்த்துத் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மாவு பிசையவும்.
 
மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும். பிறகு சப்பாத்தி செய்வது போல் உருண்டைகளாக்கி இட்டு கல்லில் போட்டு 
 
கீரை வேகச் சிறிது நேரமாகுமாதலால் எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.கீரைச்சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும்  அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம்.

எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது, அப்பளம் போல ஆகிவிடும். வெந்த பிறகு எடுத்து பரிமாறவும். இதே முறையில் அனைத்து கீரைகளையும் செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்