சுவை மிகுந்த மீல்மேக்கர் உப்புமா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
மீல்மேக்கர் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை:
 
மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும். உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
 
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும்  வதக்கவும்.
 
உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த உதிர்த்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துக் கிளறவும். பரிமாறும் முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும். சுவைமிகுந்த மீல்மேக்கர் உப்புமா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்