தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு எண்ணையை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தக்காளி தண்ணீர் விடுவதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தேவைப்பட்டால் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.