முதலில் தேங்காயை நறிக்கி வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இரண்டு தேக்கரண்டி அளவுக்குத் தேங்காயைத் தனியே எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கத்திரிக்காயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதங்கியதும் பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு வதக்கி, பின்பு வறுத்த தேங்காயைச் சேர்த்து வதக்கவும்.
இதில் தனியாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் புளிக் கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.அடுத்து அரைத்த தேங்காய்ப் பாலை ஊற்றி குறைந்த தணலில் நன்றாக கொதிக்க விடவும். சுவையான கத்திரிக்காய் தேங்காய் கூட்டு தயார்.