காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Prasanth Karthick

செவ்வாய், 26 நவம்பர் 2024 (08:57 IST)
உலர் பழங்களில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க போதுமான ஊட்டச்சத்தை எடுக்க வேண்டும். அதனால்தான் காலையில் முடிந்தவரை உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும். இவற்றின் பயன்களை தெரிந்து கொள்வோம்.



பாதாம்: 10 பாதாம் சாப்பிடுவதால் தினசரி வைட்டமின் ஈ தேவையில் 50% கிடைக்கிறது.

 
பிஸ்தா: பிஸ்தாவில் நம் வயிற்றுக்கு நன்மை செய்யும் உணவு நார்ச்சத்து உள்ளது. இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

 
வால்நட்ஸ்: மூளைக்கு ஆரோக்கியமானது. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

 
முந்திரி: முந்திரியில் ஜீரோ கொலஸ்ட்ரால் உள்ளது. அதனால் இதயத்திற்கு பாதிப்பில்லை.

 
பேரீச்சம்பழம்: உலர் பேரீச்சம்பழத்தை நெய்யில் வறுத்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

 
வால் நட்ஸ்: இவற்றை சாப்பிட்டால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை குறைக்கலாம்.

 
திராட்சை: இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வழங்குவதால், இவற்றை உட்கொள்வதால் இரத்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.

 
குறிப்பு: இந்த தகவல் ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்