வீடே மணக்கும் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி?

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (13:56 IST)
வீடே மணக்கும் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி? 
 
மிகவும் சுபமாக கிடைக்கும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த கீரைகளில் ஒன்று மணத்தக்காளி. இதில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ்,தாது உப்புக்கள் ஆகியன.உடற்றேற்றி,சிறுநீர் பெருக்கி,வியர்வைப்பெருக்கி வெளியேற்றுகிறது. இதனால் உடலில் உள்ள சூடு தணிக்கப்படுகிறது.
 
செய்ய தேவதையான பொருட்கள்:
 
மணத்தக்காளி - கால் கப் 
வெந்தயம் - சிறிது 
கடுகு - சிறிது 
வற்றல் - 4
புளி - எலுமிச்சை அளவு 
உப்பு- தேவையானவை 
 
 
செய்முறை: 
 
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கவும். பின்னர் புளியை கரைத்து ஊற்றி அதனுடன் உப்பு மணத்தக்காளி வற்றலையும் போட்டு கொதிக்கவைத்து இறக்கவும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்