செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக முகப்பரு பிரச்சனை உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவையான நேரத்தில் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்துவதால் ஏற்கனவே கண்கள் மற்றும் காதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது முகப்பரு ஏற்படவும் செல்போனே காரணம் எனும் ஆய்வு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பரு வராமல் இருக்க, எண்ணெய் பொறித்த உணவுகள் மற்றும் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். அதேசமயம், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
தினசரி உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபடவும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால், முகப்பரு வராமல் தடுக்கலாம் என கூறப்படுகிறது.