உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்களை குணமாக்கும் மணத்தக்காளி !!

சனி, 4 ஜூன் 2022 (12:51 IST)
மணத்தக்காளியின் செடியின் கீரை, பழம், வேர், தண்டு, காய் என அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவம் என இரண்டிலும் பயன்படுகிறது.


மணத்தக்காளி கீரையானது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.

மணத்தக்காளி கீரையில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.

மணத்தக்காளி கீரை கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது. மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்.

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும்.

மணத்தக்காளி கீரையானது இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்