பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (08:27 IST)
பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா. இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரியங்கா உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன் கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட தகவலை அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் முதலில் பார்த்து போலீசாருக்கு புகார் அளித்ததாகவும், இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்