இதுதான் ‘தளபதி 62’ படத்தின் தலைப்பா?

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (11:16 IST)
விஜய்யின் 62வது படத் தலைப்பு என ஒரு தலைப்பு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘தளபதி 62’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்  செய்கிறார்.
 
நாளை விஜய்யின் பிறந்த நாள். அதை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று இரவே சமூக வலைதளங்களில் ‘வேற லெவல்’ என்ற தலைப்பு பரவி வருகிறது. அதுவும் டிசைனுடன் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்,  ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்கள் போட்டு போஸ்டர் போல இந்த டிசைன் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்