சம்பள உயர்வு கொடுக்க அரசிடம் மனமிருக்கிறது ஆனால் பணம் இல்லையே - ஜெயக்குமார்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (09:42 IST)
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் விஸ்தரிப்பு பகுதியில்  தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பார்வையிட்டார். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்தார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஊதிய உயர்வு கோரி ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் போதாது என போராட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
 
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை. ஆகையால் அரசின் நிதி நிலைமையை பொறுத்துத்தான் மேற்கொண்டு முடிவு செய்ய முடியும் என அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்