தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, தன்னுடைய தொகுதியில் இறந்துபோனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அவரை தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விஜயஹரணி பேசிக்கொண்டே இருந்தார்.
அப்போது சபாநாயர் “நீங்களும் அமைச்சரும் தனியாகப் பேசிக்கொண்டீர்களா?” எனக் கேட்டுள்ளார். இதனால் ஆவேசமடைந்த விஜயதரணி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டனர். எனவே, அவர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே, விஜயதரணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சபாநாயகரின் நடவடிக்கை அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. நல்ல குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஆனால், என்னை அசிங்கப்படுத்தும் வகையில் சபாநாயாகர் பேசுகிறார். இது போன்ற அவையில் நாங்கள் செயல்பட வேண்டுமா?. இதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என அவர் பேட்டியளித்தார்.