தனியாருக்கு நிகராக நவீன பேருந்துகள் - விஜயபாஸ்கர் பேட்டி (வீடியோ)

திங்கள், 11 ஜூன் 2018 (17:55 IST)
அதிவிரைவில் போக்குவரத்து கழகம் தனியாருக்கு நிகராக நவீனபடுத்தப்படும். போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம் என கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

 
கரூரில் உள்ள தனியார் அரங்கில் இந்திராகாந்தி தேசிய முதியோர்தொகை., மாற்றுதிறனாளிகள் உதவிதொகை., விதவைகள் உதவிதொகை என 8-துறைகளின் கீழ் 1198- பயனாளிகளுக்கு  சமூக பாதுகாப்பு திடத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதிய தொகைக்கான உத்தரவு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்., கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில்  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரை நிகழ்த்திய பிறகு 1,198-பயனாளிகளுக்கும் தன் கைப்பட ஓய்வூதியத்திற்கான உத்திரவுகளை பயனாளிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:
 
போக்குவரத்து தொழிலாளர்கள் 4-மாத நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை வைத்தார்கள். அதனை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த 15-நாட்களுக்கு முன்பே அதற்கான ஆணையை வழங்கி விட்டார். இந்த தொகை இன்னும் ஓரிறு நாட்களில் வழங்கப்பட்டு விடும். ஆனால்., தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டும் என்றும் எதோ தாங்கள் போராடி பெற்று கொடுத்தது போல சொல்லிகொண்டு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
 
அதே சமயம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  நன்றாக  தெரியும்  எந்த  அரசு., எந்த முதலமைச்சர் அவர்களுக்கு நல்ல திட்டமும்., நல்ல  ஊதிய உயர்வும் வழங்கினார் என்று., என கூறினார். தொடர்ந்து பேசும் போது.,  மிக விரைவில் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிற இரயில் கரூரிலிருந்த இரவு நேரத்தில் இயக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
 
எனவே வெகு விரைவில் கரூலிருந்து முதன்முதலாக சென்னைக்கு இரயில் இயக்கப்பட உள்ளது என்றும் மதுரையில் இருந்து கரூர் வழியாக பகல் நேர சேர்கார் இயக்கப்பட வேன்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் உடனே பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே பகல் நேரத்தில் கரூரிலிருந்து சென்னைக்கு விரைவில் இரயில் இயக்கப்படும் என்றார். மேலும்.,தமிழக போக்குவரத்து கழகம் தனியாருக்கு நிகராக நவீனபடுத்தப்படும் என்றும் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்றார்.
 
பேட்டி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் -தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்.
 
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்