கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவுடன் இணைந்த ஆர்யா!

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (19:06 IST)
அயன் படத்தை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
செல்வராகவனின் என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா, அவரின் 37வது படமான இதில், மோகன்லால், சமுத்திரக்கனி மற்றும் அல்லு சிரிஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 
 
மேலும், சூர்யாவுக்கு சாயிஷா ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பதும் இந்த படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஆர்யா, சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்