அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 9 மே 2025 (18:36 IST)

நடப்பு ஆண்டு +2 ரிசல்ட் வெளியான நிலையில் அதிகமான மாணவர்கள் அறிவியல் பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நேற்று தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அதிசயக்கத்தக்க அளவில் மாணவர்கள் அறிவியல் பாடங்களான வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் அதிகளவில் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். வணிகவியல், பொருளாதாரம் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.

 

அறிவியல் பாடங்களில் பல மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ள நிலையில் பொறியியல் படிப்புகளுக்கு முழு போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீதம் கட் ஆப் மதிப்பெண்கள் வைத்துள்ள மாணவர்கள் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்புவார்கள் என்பதால் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள், பிஎஸ்சி தொழில்நுட்ப கல்லூரிகளில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் 5 முதல் 10 மதிப்பெண் வரை மேலும் உயரலாம் எனக் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்