மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

Mahendran

வெள்ளி, 9 மே 2025 (18:35 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் பத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதியான ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரை தாக்கியது. இந்திய ராணுவம் திடீரென பதிலடி கொடுத்து, எஸ்-400 போர்க்கவசத்தை பயன்படுத்தி ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்தது.
 
இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர் கூறியபோது, "பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து சரியான பதிலடி பெற்றுள்ளது. பாகிஸ்தான் குருத்வாரா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தாலும், மத ரீதியான கட்டடங்களைக் குறிவைத்து தாக்கியதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், பொய்யான தகவல்கள் மூலம் உலகை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். பாகிஸ்தான் மதவாத பிரச்சினைகள் உருவாக்க முயற்சித்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
 
அதிகமாக தாக்குதல்களில், பாகிஸ்தானின் பூஞ்ச் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது, இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், இந்திய ராணுவம் மீது மீண்டும் பொய் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
 
இந்தியா, பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்