இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டது குறித்து கர்னல் சோஃபியா குரேஷி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் நேற்று பாகிஸ்தான் ஏவிய 500 ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் முன்னதாக சீனாவிடம் பாகிஸ்தான் வாங்கியிருந்த வான்வழி ஏவுகணை முறியடிப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்நிலையில் நேற்று இரவு இந்தியா மீது 500 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவிய நிலையில் அவற்றில் 499 ட்ரொன்களை இந்திய ராணுவம் வானத்திலேயே சுட்டு வீழ்த்தியுள்ளது. ஒன்று மட்டும் காஷ்மீரின் ஆளில்லா பகுதியில் விழுந்து வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ள கர்னல் சோஃபியா குரேஷி “இந்தியாவின் ராணுவ பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்த முயன்ற அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை ஆய்வு செய்ததில் அவை துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை என தெரிய வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சீனா, துருக்கி என பல நாடுகளிடமும் பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்கள் இந்திய ராணுவத்தால் அழிக்கபட்டு வருவது பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K