'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களுக்கு எதிராக போலீஸ் புகார்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (22:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய திரைப்படங்கள் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் படத்தை எதிர்பார்த்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில்  சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் 'பேட்ட', விஸ்வாசம் படங்களுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய இரு திரைப்படங்களும் அரசு விடுமுறையில்லாத, நாட்களில் 6 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், இது போன்ற தினங்களில் 4 காட்சிகள் திரையிட வேண்டும் என்ற அரசாணை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அதையும் மீறி 6 காட்சிகள் திரையிட இருப்பது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும்  6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகளின், அங்கீகாரத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே முன்பதிவு மூலம் 6 காட்சிகளுக்கு வசூல் செய்த கட்டணங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்