தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.
65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. முக்கியமாக, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி முன்னனியில் இருக்கிறார்.