முதலாளிகளை எதிர்த்து அநியாயத்தை தட்டி கேட்கும் சமுத்திரக்கனி - சங்கத்தலைவன் ட்ரைலர்!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (18:11 IST)
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம்  தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது. 
 
வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திர கனியுடன் விஜே ரம்யா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போராட்டம், அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் அசுரன் பட கதையை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த அந்த ட்ரைலர் வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்