ஜெயலலிதா ரோலில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன் - குயின் டிரெய்லர் இதோ!

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (18:07 IST)
மறைந்த தமிழ முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் இயக்க கோலிவுட்டில் இருக்கும் பல இயக்குனர்கள் போட்டிபோட்டு முந்தியடித்தனர். அதில் இயக்குனர் கெளதம் மேனன் "குயின்" என்ற டைட்டிலில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்கியுள்ள வெப் சீரிஸின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் உள்ளடக்கி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.  
 
இந்நிலையில் தற்போது குயின் படத்தின் ட்ரைலர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறு வயது ஜெயலலிதாவாக அனிகா நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் அரசியல் காலகட்டங்களில் இடம்பெற்றுள்ளார். இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து இந்த வெப் சீரிஸ் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்