கே.ஜி.எஃப் -2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா??

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (23:24 IST)
கே.ஜி.எஃப் -2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என சூழல் நிலவுவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் அண்டு இயக்குநர் பிரசாந்த் ரீல்,  கே.ஜி.எஃப் சேப்டர்1 என்ற படத்தை நடிகர் யாஷ்-ஐ வைத்து இயக்கினார்.

இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி பிரஷாந்த் நீல்ஸ் மற்றும் நடிகர் யாஷிற்க் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியது.

மேலும் கேஜிஎஃப் சேப்டம் 2 படம் ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் தள்ளிபோகும் என தெரிகிறது.

கேஜிஎஃப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கொரொனா இரண்டாம் அலை காரணமாக இன்னும் முடியாமல் உள்ளதால் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி, தியேட்டர்கள் திறந்தபின் இப்படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ள்தாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்