ஜில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? சூர்யாவுக்கு சூப்பரா செட் ஆகியிருக்குமே!

சனி, 19 ஜூன் 2021 (18:20 IST)
சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான படம் ஜில்லுனு ஒரு காதல். இந்த படம் இன்றளவும் பல ரசிகர்களின் பேவரைட் படமாக இருக்கிறது. முன்பே வா என் அன்பே வா பாடல் எப்போது கேட்டாலும் ஒரு பிரெஷ் பீலிங்ஸை கொடுக்கும். 

இந்நிலையில் 15 வருடத்திற்கு பிறகு இப்படத்தின் வெளிவராத ரகசியம் ஒன்று கசிந்துள்ளது. அதாவது ஜில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவிற்கு பதில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகை அசின் தானாம். ஆனால் அவருக்கு கதையில் சில காட்சிகள் சரியாக படாததால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம். ஒரு வேலை அசின் நடித்திருந்தால் இன்னும் செமயா இருந்திருக்கும் என பீல் பண்ணுகிறார்கள் ரசிகர்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்