ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் கொரோனா நிதி உதவி

சனி, 19 ஜூன் 2021 (17:54 IST)
ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.2   கோடி வழங்கியுள்ளது.

இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு சினிமா துறையினரும், அரசியல் பிரமுகர்களும், தனியார் தொண்டு நிறுவனங்கலும் உதவி வருகின்றனர்.

அந்தவகையில் ரஜினியின் 2.0, உள்ளிட்ட பல்வேறு படங்களை எடுத்துள்ள லைகா சுபாஸ்கரன் சார்பில் ரூ.2 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை அவர் இன்று முதல்வரிடம் அளித்தார்.

லைகா நிறுவனத்தின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்