என் அப்பா கட்சிக்கு நானே ஓட்டுக் கேட்டு வரமாட்டேன் – ஸ்ருதி ஹாசன் அதிர்ச்சி பதில்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:28 IST)
நடிகை ஸ்ருதி ஹாசன் தன் அப்பாவின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்யமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் முழு மூச்சாக அவர் கட்சி இறங்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவரின் மகள் ஸ்ருதி ஹாசனிடம் ‘உங்கள் அப்பாவின் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வருவீர்களா என்ற கேள்வி கேடக்ப்பட்டபோது அதற்கு சான்ஸே இல்லை’ என சொல்லி நழுவி விட்டார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வீட்டுலயே உங்களுக்கு ஆதரவு இல்லையே கமல் சார் என கேலி செய்ய ஆரம்பித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்