ரஜினி கமலை விட நான் மூத்தவன் …ஒருநாள் தாங்க மட்டார் - .சீமான்

திங்கள், 5 அக்டோபர் 2020 (17:00 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது ஆன்மிகம் அரசியல் என்பதை அறிவித்ததால் அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இன்னும் கட்சி பேர் கூட அறிவிக்கல்வில்லை.

ஆனால் அடுத்தடுத்த தம் அரசியல் பணிகளைச் செய்யாமல் மேற்கொண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினி.

ஆனால் ரஜினி மராட்டியர், கன்னடர் என்று சீமான், உள்ளிட்ட பலரும் கூறி வந்த நிலையில் அவர் முதல்வராவதற்கும் சிலர் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி தனது தொண்டர்களை அழைத்துப் பேசியபோது, தான் முதல்வர் வேட்பாளராக நிற்கவில்லை என்றும் வேறொருவரை  நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்?

அவரது கருத்துக்கு ரஜினி மன்றத்தினர் ஏற்கவில்லை;  இந்நிலையில் இதுநாள் வரை ரஜினியின் அரசியல் வருகையை எதிர்த்து வந்த சீமான், தற்போது  அவர் மீதான் முரண்பாடு நீங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் கூறியுள்ளதாவது:

ரஜினி வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாகக் கூறியவுடன் அவர் மீதான முரண்பாடு நீங்கிவிட்டது. ரஜினி, கமல் இருவரும் வயதிலும், திரைத்துறையிலும் சீனியர்களாக இருந்தாலும் நான் அரசியல அவர்களை விட மூத்தவன். அதிக அவமானங்களையும்ம் கஷ்டங்களையும் இந்தப் பத்து வருடங்களில் சந்தித்திருக்கிறேன்.
ரஜினி அமைதியை விரும்புகிறவர் அவர் இதையெல்லாம் ஒருநாள் கூட தாங்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்