காக்க காக்க படத்தை விஜய் நிராகரிக்க இதுதான் காரணமாம் – உண்மையை உடைத்த கௌதம் மேனன்!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (11:04 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காக்க காக்க படத்தை அவர் விஜய்க்கும் சொல்லியிருந்தாராம்.

நடிகர் சூர்யா திரையுலகில் 1996 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் 2002 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படம்தான் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்ற அவரின் முதல் திரைப்படம். அதுவரை சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவித்த அவருக்கு முதல் வசூல் வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால் அந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் அவர் இல்லையாம். அஜித், விஜய் மற்றும் விக்ரம் ஆகியவர்களிடம் அந்த கதையை கௌதம் மேனன் கூறியிருந்தாராம். விஜய்க்கு முதல்பாதி பிடித்திருந்தாலும், இரண்டாம் பாதியை கௌதம் முழுவதுமாக முடிக்காமல் இருந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

கௌதம் மேனன் எப்போதும் 80 சதவீத திரைக்கதையை மட்டுமே முடித்து ஷூட்டிங் சென்றுவிடுவார். ஷூட்டிங்கின் போது மனதில் தோன்றுவதை எழுதி க்ளைமேக்ஸை முடித்துவிடுவார். ஆனால் விஜய் முழு திரைக்கதையையும் படித்த பின்னரே நடிப்பதா வேண்டாமா என முடிவெடுப்பார். அதனால் அந்த படத்தில் இருவரும் நடிக்க முடியாமல் போனது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்