ரஜினிகாந்தின் அரசியல் பயணத்துக்காக சிஇஓ பதவியை ராஜினாமா செய்தவர் யார் தெரியுமா?

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (14:46 IST)
ரஜினிகாந்தின் அரசியல் பயணத்திற்காகத் தன்னுடைய சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராஜு மகாலிங்கம்.
விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’, ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.O’, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படங்களின் தயாரிப்பு நிறுவனம், லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்த நிறுவனத்தின் சிஇஓவாக ராஜு மகாலிங்கம் இருந்தார்.
 
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பதற்காக தன்னுடைய சிஇஓ பதவியை ராஜினாமா  செய்வதாக அறிவித்துள்ளார்.
 
“ரஜினியுடன் கடந்த 3 வருடங்களாக இருந்து வருகிறேன். அவரின் பண்புகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளேன். எனவே, என்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியின் அரசியல் பயணத்தில் இணைகிறேன்” என ராஜு  மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்