ரஜினியின் காவலனாக மாறும் ராகவா லாரன்ஸ் : விரைவில் அரசியல் அறிவிப்பு

புதன், 3 ஜனவரி 2018 (11:37 IST)
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
நடிகராக இருந்தாலும் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். மேலும், நடிகர் ரஜினியின் மீது திவிர அன்பும் பற்றும் கொண்டவர். கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது கூட மாணவர்களுடன் அவர் கலந்து கொண்டார். 
 
அந்நிலையில், சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த போது அதை ஆனந்தமாக வரவேற்றார். 
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ரஜினியின் தீவிர தொண்டனாக, காவலனாக இருப்பேன் எனக் கூறினார். வருகிற 4ம் தேதி, ஆவடியில் தனது தாய்க்காக கட்டிய கோவிலில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். 
 
எனவே, அன்று அவர் தனது அரசியல் அறிவிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்