இந்த வாரம் வெள்ளிக் கிழமை 6 படங்கள் – வெல்லப்போவது யார் ?

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:40 IST)
மாஃபியா

பிப்ரவரி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6 படங்கள் ரிலிசாக இருப்பதால் அதில் எந்த படம் வெல்லப்போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் இல்லாததால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிறிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை முடிவு வரிசையாக இறக்கி வருகின்றனர். அதன் படி வரும் வெள்ளிக்கிழமை 6 படங்கள் வெளியாக உள்ளன.

கன்னி மாடம், மாபியா, காட்பாதர், மீண்டும் ஒரு மரியாதை, பாரம், குட்டி தேவதை ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இதில் பாரம் படம் தேசிய விருது பெற்றதன் மூலமாகவும் வெற்றிமாறன் ரிலீஸ் செய்வதாலும் கவனம் ஈர்த்தது. மீண்டும் ஒரு மரியாதை இயக்குனர் பாரதிராஜா 6 வருடங்களுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால் முக்கியத் துவம் பெற்றுள்ளது.

மாபியா படம்தான் இந்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம். அருண்விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இருப்பதால் கமர்ஷியல் மதிப்பு அதிகமாக உள்ளது. கன்னிமாடம், குட்டிதேவதை மற்றும் காட்பாதர் ஆகிய படங்கள் ரிலிஸுக்குப் பிறகு பாராட்டுகளைப் பெற்றால் மட்டுமே ரசிகர்களை ஈர்க்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்