தளபதி சோகத்தில் இருந்தால் இவருடைய வீடியோவைத்தான் பார்ப்பாராம்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:36 IST)
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார்.  காமெடி , டான்ஸ் , நடிப்பு என அத்தனை வித்தைகளையும் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சிறந்த நடிகராக விஜய் வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் பங்கேற்ற பிரபல சேனல் ஒன்றில் நடிகர் விஜய்யிடம் நடிகர் ஜெயம் ரவி "சினிமா துறையில் தொடர்ந்து 20 வருடங்களாக முன்னனி நடிகராக இருப்பது மிகவும் கடினம், அதிலும் ஆக்சன், நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் காமெடியோடவே பண்ணுறீங்களே அது எப்படி...? நீங்களே யோசித்து செய்வதா..? அல்லது யாரேனும் கற்றுக்கொடுத்ததா..? என கேட்டதுக்கு நடிகர் விஜய் கூறிய பதில் இது தான்.. 
 
அதாவது, என்னுடைய காரில் எப்போதும் கவுண்டமணி – செந்தில் அவர்களின் காமெடி சிடி இருக்கும். நான் அவர்களுடைய மிகப்பெரிய ரசிகன். நான் கஷ்டமாக உணரும்போது... எப்போதெல்லாம் என் மனம் டவுனாகிறதோ அப்போதெல்லாம் அவர்களுடைய காமெடி காட்சி தான் பார்ப்பேன். அவர்களிடம் கற்றுக்கொண்டது தான் இதெல்லாம் என கூறி சிரித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்