விஜய் 62 படத்தில் லிவிங்ஸ்டன்?

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (12:06 IST)
விஜய் 62 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
விஜய் 62 படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, வரலட்சுமி, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
 
இந்நிலையில், இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்