தன்னுடைய அடுத்த படம் பற்றிப் பேசும்போது, நயன்தாரா, விஜய் சேதுபதி பெயர்களைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார் தமன்னா.
சிரஞ்சீவி நடித்துவரும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் தமன்னா. 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் ரிலீஸாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, சுதீப் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆனால், அவர்களைப் பற்றி தமன்னா எதுவும் பேசவில்லை. இத்தனைக்கும் ‘தர்மதுரை’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.