இளம் தலைமுறைக்கு நடிகர் அக்‌ஷய்குமார் எதைக் கொடுக்கிறார்…? விமர்சனங்களுடன் வைரலாகும் போட்டோ

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:03 IST)
பாலிவுட் சினிமா உலகத்திற்கு தற்போது போதாத காலம். சமீபத்தில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அவரது காதலி ரியா போதை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பல புதிய திருப்பதைக் கண்டுள்ளது.

இதனால் பலரும் இதில் சிக்க வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியானது. அந்த வகையில் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில்  ஷ்ரத்தா கபூர்ம், சாரா சலு கானுக்கு போதைப் பொருள் போலீஸார் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இவ்வழக்கில் சிபிஐயுடன், அமலாப்பிரிவினர்,  போதை தடுப்பு போலிஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில் மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் பிரபல தேசிய விருது பெற்ற நடிகர் அக்‌ஷய் குமார் தனது தோழிகள் , சக நடிகைகளுடன் சிறுவர்களுடன் ஒரு நிகழ்ச்சி பங்கேற்றபோது, அவர்கள் கையில் ஒரு பாட்டில் இருந்துள்ளது குறித்து தற்போது சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் சிறியோருக்கு அக்‌ஷய்குமார் இதைத்தான் சொல்லிக் கொடுப்பார என்று விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் அவர் பழச்சாறு கொண்ட வையின் தான் கொடுக்கிறார் என்று அவருக்கு ஆறுதலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்