'தி லயன் கிங்' படத்தை அடுத்து அனிமேஷனில் தயாராகும் 'டாம் அண்ட் ஜெர்ரி!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (20:22 IST)
சமீபத்தில் வெளியான 3D அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. இந்தப் படம் தமிழ் உள்பட இந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 3D அனிமேஷன் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து இன்னும் அதிக 3D அனிமேஷன் படங்களை உருவாக்க ஹாலிவுட் திரையுலகம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வார்னர் பிரதர்ஸ் தற்போது 'டாம் அண்ட் ஜெர்ரி' கதாபாத்திரங்களை வைத்து 3D அனிமேஷனில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது 
 
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த 'டாம் அண்ட் ஜெர்ரி' திரைப்படம் இதுவரை 2Dயில் மட்டுமே வீடியோக்களாக வெளிவந்த நிலையில் 3Dயில் இந்த படம் வெளிவந்தால் குழந்தைகளுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிகைகளுடன் இந்திய நடிகை பல்லவி ஷர்தா என்பவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பல பாலிவுட் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் க்ளோ கிரேஸ் மார்டேஸ், மைக்கேல் பீனா, காலின் ஜஸ்ட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்
 
மேலும் இந்த படம் 2020 ஆம் ஆண்டு 21 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட வாரியம் திட்டமிட்டுள்ளது. லயன் கிங், டாம் அண்ட் ஜெர்ரி படங்களை அடுத்து இன்னும் பல திரைப்படங்கள் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்க உள்ளதால் மல்டிமீடியா படித்த மாணவர் மாணவிகளுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்